Saturday, June 5, 2010

2.ABC resuscitation: ஏபி சி மீளவுயிர்ப்பிக்கும் செயன்முறையின் படிமுறைகள்

2.ABC resuscitation:  ஏபி சி மீளவுயிர்ப்பிக்கும் செயன்முறையின் படிமுறைகள் ABC என்ற ஒழுங்குமுறையில் செய்யப்படும்போது துரிதமாக செயற்படமுடியும்.
சுவாசம், இதய்யத்துடிப்பு நிற்கும்போது ஒருவர் மரணமடைகிறார். அவர் மூளையிறந்துபோவதே மரணம் என இன்றைய மருத்துவ உலகில்  கருதப்படுகிறது.இதயத்துடிப்பு நின்றவுடன் இரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. இரத்த ஓட்டமில்லாமல் மூளை ஏறத்தாழ ஆறு நிமிடங்கள் வரையே தாக்குப்பிடிக்கும். இந்த ஆறுநிமிடங்களுக்குள் செயற்கைச்சுவாசமும்,நெஞ்சுக்கூட்டினை அழுத்தி இதயத்தினை பிசைவதன் மூலம் இரத்த ஓட்டத்தை உடலில் ஏற்படுத்த முடியும்.இதயம் மீண்டும் துடிக்கத்தொடங்கக்கூடும்.இந்தச்செயன்முறை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
 A-Airway சுவாசப்பாதையை சீர் செய்தல்
 B-Breathing-செயற்கைச்சுவாசம் அளித்தல்
 C- Circulation-இரத்தச்சுற்றோட்டத்தைச்சீராக்கல்
செயன்முறை உடனடியாகவும் முறையாகவும் செய்யப்பட்டால் மூளையைப்பாதுகாத்து உயிரை மீட்கலாம்.
இணையத்தில் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இந்த செயன்முறை பற்றிய வீடியோக்கள் அனேகம் இருக்கின்றன.
அதில் ஒன்று:
http://www.vidoemo.com/yvideo.php?cpr-training-video-2009-latest-guidelines-first-aid-safetycare-cardiopulmonary-resuscitation-dvd=&i=NXI3aGFWcWuRpZlpYZWs
இந்த அறிவு உயிர்காக்கும்.

Saturday, May 8, 2010

AAA-Abdominal Aortic Aneurysm

AAA-Abdominal Aortic Aneurysm: ட்ரிப்ள் ஏ அல்லது அப்டொமினல் அயோட்டிக் அனியூரிஸ்ம்:
இது வயிற்றறையினூடாக செல்லுகிற பிரதான இரத்தகுழாய்- நாடி விரிவடைவதால் உருவாகும் ஒரு நிலை. இரத்தக்குழாயின் சுவர் பலவீனமடைவதனால் இரத்த ஓட்டம் ஏற்படுத்தும் அழுத்தத்தின் காரணமா

சில இடங்களில் விரிவடைந்து விடுகிறது.

அபாயங்கள்:

 இரத்தக்குழாய் வெடித்து இரத்த இழப்பு
 இரத்தம் உறைந்து கட்டிகள் காலுக்குச்செல்லும் இரத்தக்குழாயை அடைக்கலாம்.
யாரில்:
65 வயதுக்கு மேற்பட்டவர்களில்.ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பரம்பரை/குடும்பத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே பரிசோதனை செய்வது அவசியம்.